நீட் போன்ற போட்டித் தேர்வுகளால் சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் நலன் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கண்டறிய ஆய்வு எதனையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா? என மக்களைவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து திமுக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"முன்னாள் மத்திய அமைச்சரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர் பாலு எம்.பி. நேற்று 30 நவம்பர் 2021, மக்களவையில், மருத்துவப் படிப்புக்கான அனைத்து இந்தியப் போட்டித் தேர்வு போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகள் காரணமாக சமுதாயம் மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர் நலன் எவ்வகையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வு எதனையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளதா?, அப்படியானால் அதன் விவரம் என்ன?, அத்தகைய ஆய்வேதும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அதற்கான காரணங்கள் என்ன?, அனைத்திந்திய அளவிலான பொது நுழைவுத் போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பாதிக்கப்படாமலும் அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்திடவும் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?" என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரப் பங்களித்தல் துறை இணையமைச்சர் பிரதிமா பௌமிக் கூறியதாவது:
"நீட் உள்ளிட்ட அனைத்திந்திய போட்டித் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்று மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.
எனினும், மிக அண்மையில் கடந்த ஆகஸ்ட் 2021 முதல், மருத்துவப் படிப்புக்கான அனைத்திந்திய கோட்டாவில், நீட் தேர்வில் சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நீட் தேர்வு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. என அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு அதிகாரம்
மேலும், அரசியலமைப்பு சட்டம் பிரிவு 338 பி (5) ன் படி தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், பின் தங்கிய வகுப்பு மக்களின் உரிமைகளை பாதுகாத்து உறுதி செய்திட உரிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படுமானால் இந்த ஆணையத்தை அணுகிப் புகார் அளிக்கலாம் என்றும், அத்தகைய புகார்களை விசாரிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது என்றும், தெரிவித்திருந்தார்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago