‘பபாசி’ தலைவராக வயிரவன் தேர்வு நிர்வாகிகள் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவராக எஸ்.வயிரவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘பபாசி’ என்று அழைக்கப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது.

இதில் ‘குமரன் பதிப்பகம்’ எஸ்.வயிரவன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘நாதம் கீதம்’ எஸ்.கே.முருகன் மீண்டும் செயலாளராகவும், ‘லியோ புக்ஸ்’ ஏ.குமரன் பொருளாளராகவும், ‘வனிதா பதிப்பகம்’ பெ.மயில வேலன் துணைத் தலைவராகவும் (தமிழ்), ‘மதுரை, சர்வோதய இலக்கியப்பண்ணை’ வி.புருஷோத்தமன் துணைத் தலைவராகவும் (ஆங்கிலம்), ‘முல்லை பதிப்பகம்’ மு.பழநி இணைச் செயலாளராகவும், ‘உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ்’ இராம.மெய்யப்பன் துணை இணைச் செயலாளராகவும் (தமிழ்), ‘டைகர் புக்ஸ்’ எஸ்.சுப்பிரமணியன் துணை இணைச் செயலாளராகவும் (ஆங்கிலம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், நிர்வாகக் குழு (தமிழ்) உறுப்பினர்களாக ‘நக்கீரன்’ ஆர்.தனுஷ், ‘ஐஎஃப்டி’ ஐ.ஜலாலுதீன், ‘புலம்’ லோகநாதன், ‘தமிழ்ச் சோலை பதிப்பகம்’ எஸ்.பிரபாகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், நிர்வாகக் குழு (ஆங்கிலம்) உறுப்பினர்களாக ‘மயூரா புக்ஸ்’ ஏ.கேளியப்பன், ‘ஸ்பைடர் புக்ஸ்’ ஐ.முபாரக், ‘டெக்னோ புக்ஸ்’ நந்த் கிஷோர், ‘ஜெய்கோ’ கே.ஸ்ரீராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினர்களாக ஜே.ஹரி பிரசாத், ஏ.எஸ்.மகேந்திரன், எஸ்.ராம்குமார், ஆர்.சங்கர் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் நேற்று பொறுப் பேற்றுக் கொண்டனர். இவர்கள் 2023-ம் ஆண்டு வரை இப்பதவிகளை வகிப்பார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்