ஒரு மாதமாக கன மழை பெய்து வருவ தால் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடங்களை கட்டிட பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்து கட்டிடத்தின் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரோனா ஊரடங்கு காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து பருவ மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பள்ளிகளுக்கு அடிக்கடி விடுமுறை விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தொடர் கன மழை காரணமாக அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டிடம் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சுவர்கள் மற்றும் மேற்கூரை கான்கீரிட் பெயர்ந்து விழுகிறது. மேலும் நீர் கசிவும் ஏற்பட்டுள்ளது. அரசுப் பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மை கேள்விகுறியானது. வகுப்பறை மற்றும் பள்ளி வளாகங்களிலும் மழை நீர் சூழ்ந் துள்ளது. இதனால், மாணவர்களின் பாது காப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, பள்ளி கட்டிடங் களை கண்காணித்து பழுது நீக்கவும் மற்றும் தண்ணீர் தேங்காமல் இருக்க கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க தவறினால் அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள்தான் பொறுப்பு என்ற அறிவிப்புக்கு ஆட்சேபம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் அ.அந்தோனிராஜ், இந்து தமிழ் திசையிடம் கூறும்போது, “அரசுப் பள்ளிகளின் 80 சதவீத கட்டிடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இந்நிலையில், பள்ளி கட்டிடங்களை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து பாதுகாப்பானது என உறுதி செய்து கொள் ளுங்கள் என அறிவுறுத்தப்பட்டு வரு கின்றனர். கட்டிடத்தின் உறுதித் தன்மையை தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களால், எந்த வகையில் உறுதி செய்து கொள்ள முடியும் என தெரியவில்லை.
மாணவர்களுக்கு பாதிப்பு என்றால், தலைமை ஆசிரியர்களை பொறுப்பேற்க நிர்பந்திக்கப்படுவது சரியான நடவடிக்கை அல்ல. கட்டிடத்தின் தன்மை குறித்து மேலோட்டமாகதான் தலைமை ஆசிரி யர்களால் தகவல் தெரிவிக்க முடியும். அவர்கள் கட்டிட வல்லுநர்கள் கிடையாது. வந்தவாசி அடுத்த மூடூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் தலைமை ஆசிரியர் மற்றும் வட்டார கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்திருப்பது ஆசிரியர்களிடம் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்.
பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சித் துறையில் உள்ள பொறி யாளர்களை கொண்டு அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து, அதன் உறுதித் தன்மையை உறுதி செய்ய வேண்டும். கட்டிட பொறியாளர்களை கொண்டு பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, பள்ளிகள் சிறப்பாக நடைபெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago