அனைத்து வழக்குகளிலும் நேரில் ஆஜராகி வென்றார்: ஓய்வூதியத்துக்காக 4 ஆண்டுகள் போராடிய ‘திண்ணை’ தாத்தா- நீதிபதிகளுக்கு கண்ணீர் மல்க நன்றி

By கி.மகாராஜன்

சொந்த மகன்களால் புறக்கணிக்கப் பட்டு திண்ணையில் வசிக்கும் 76 வயது முதியவருக்கு ஓய்வூதியம் வழங்காமல் வழக்கு மேல் வழக்கு போட்டு 4 ஆண்டுகளாக தாமதப்படுத்திய அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தின் கடுமையால் மொத் தமாக ஓய்வூதியம் வழங்கினர்.

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்தவர் என்.வேணுநாதன் (76). இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். வள்ளியம்மாள் சில ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறப்புக்குப் பிறகு மகன் கள் கவனிக்காததால், வீட்டை விட்டு வெளியேறி சந்திரபாளையத் தில் உள்ள ஒருவரது வீட்டின் திண்ணையில் குடியேறினார்.

தமிழக அரசின் முதியோர் உதவித்தொகை கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப் பரங்குன்றம் வட்டாட்சியர் ஆகி யோரிடம் 2013-ல் மனு அளித்தார். அவருக்கு ஓய்வூதியம் வழங்க அதிகாரிகள் மறுத்ததால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அவரது மனுவைப் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால் 2-வது முறையாக மீண் டும் நீதிமன்றத்தின் படியேறினார்.

கலங்கிய முகம், கந்தலான உடை, கைத்தடியுடன் நீதிமன்றத் தில் நேரில் ஆஜராகி, ‘சொந்த மகன்களால் விரட்டியடிக்கப்பட்டு, ஒருவேளை சாப்பாட்டுக்கே வழி யின்றி திண்ணையில் வாழ்வதாக’ நீதிபதியிடம் கண்ணீர் மல்க முறை யீடு செய்தார். அவரது கோரிக் கையை ஏற்று, மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்க 11.9.2014-ல் தனி நீதிபதி உத்தர விட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அது தள்ளுபடி யானதால் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி யானது. இதனிடையே நீதிமன்றத் தின் உத்தரவை நிறைவேற்றா ததால் மதுரை ஆட்சியர் மற்றும் சிறப்பு வட்டாட்சியர் மீது நீதி மன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற் கொள்ளக்கோரி வேணுநாதன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, முதியோர் உதவித்தொகை வழங்க மறுக்கும் அதிகாரிகள் செயலில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்த னர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சி.டி.செல்வம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வேணுநாத னுக்கு இதுவரை வழங்க வேண்டிய முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ.80,500-க்கான காசோலையுடன் ஆஜராகினர் அதிகாரிகள். அந்த காசோலையை வேணுநாதனிடம் நீதிபதிகள் நேரில் வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட அவர், கண்ணீர் மல்க நீதிபதிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

முதியோர் ஓய்வூதியத்துக்கான 4 ஆண்டுகால பேராட்டம் முடிவுக்கு வந்தது தொடர்பாக வேணுநாதன் கூறும்போது, ‘‘3 மகன்கள் இருந் தும் பலனில்லை. கோயில் கோயி லாக சென்று பிரசாதத்தை சாப் பிட்டு வாழ்கிறேன். சில மாதங் களுக்கு முன்பு கீழே விழுந்து முதுகு தண்டுவடத்தில் பலமாக அடிபட்டது. அன்றிலிருந்து ஊன்று கோல் உதவியுடன் நடமாடி வருகி றேன். இந்தப் பணத்தை மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துவேன்” என்றார்.

ஓய்வூதியத்துக்காக வேணு நாதன் 2 ரிட் மனுக்களும், ஒரு நீதி மன்ற அவமதிப்பு மனுவும் தாக் கல் செய்தார். அரசு சார்பில் மேல் முறையீடு, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்திலும் வேணுநாதன் வழக் கறிஞர் வைக்காமல் அவரே ஆஜ ராகி வாதாடியது குறிப்பிடத்தக்கது.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்