எஸ்சி, எஸ்டி மாணவர்களின் படிப்பு உதவித் தொகைக்கான வருமான வரம்பை உயர்த்தியுள்ள தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 8 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கான படிப்பு உதவித் தொகைக்கு வருமான வரம்பை உயர்த்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.
» நவ.28 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்
» நவ.28 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்
அதனை நிறைவேற்றும் வகையில் வருமான வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கு எமது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எமது கோரிக்கை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருந்தார். தற்போது ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
எஸ்சி- எஸ்டி மற்றும் கிறித்தவ மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களுக்கு படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு இதற்கு முன்பு ரூ.2.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நீண்டகாலமாக அது மாற்றப் படாமலேயே இருந்தது.
பிற்படுத்தப்பட்டோருக்கு கிரீமிலேயர் வருமான வரம்பு ரூ. 8 லட்சம் ஆகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான ( EWS) இட ஒதுக்கீட்டுக்கு வருமான வரம்பு ரூ.8 லட்சம் ஆகவும் இருக்கும் நிலையில், எஸ்சி - எஸ்டி பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு மட்டும் ரூ.2.5 லட்சம் என நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது.
அதனை உயர்த்த வேண்டியதன் தேவையை வணிக சார்பில் முதல்வரிடம் நேரிலும், கடிதம் மூலமாகவும் வலியுறுத்தியிருந்தோம்.
எமது கோரிக்கை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருந்தார். தற்போது ஆராய்ச்சிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித் தொகை பெறுவதற்கு வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அவர்களுக்கான உதவித்தொகையும் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. படிப்பு உதவித்தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1200 இல் இருந்து 1600 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிக் கல்வி ( பிஎச்டி) அதிகமாகப் பெறும் மாநிலம் தமிழகம் தான். அவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் கூடுதலாக 400 பேர் பி.எச்டி ஆராய்ச்சியில் ஈடுபட இது வழிவகுக்கும்.
இந்தியாவுக்கே முன்னுதாரணமாக இவற்றைச் செய்திருக்கும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago