வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நாளை (நவ.29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவிருந்த நிலையில் அது நாளைக்குப் பதில் நாளை மறுநாள் (நவ.30) ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதால் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்ட பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்கள் எச்சரித்துள்ளன.
இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, மிககனமழைக்கு வாய்ப்பு?
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவ.28) வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மிககனமழை வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இன்று மிககனமழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளகக் கூறப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு, மத்திய மேற்குப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago