விருத்தாசலம் அருகே சுடுகாட்டை மழைநீர் சூழ்ந்ததால் ஊருக்குள்ளேயே வைத்து சடலத்தை எரித்து வருகின்றனர் கிராம மக்கள்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே க.இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மனைவி ராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையால் கிராமத்தில் வீதி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது.
இருப்பினும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் வீட்டில் இறுதிச் சடங்கு முடித்து, அவரது உறவினர்கள் அவரது உடலை எரிக்க சுடுகாட்டுக்கு கொண்டு சென்ற போது, சுடுகாடு முழுவதும் தண்ணீர் சூழந்த, மயானக் கொட்டகையும் தண்ணீர் நிரம்பியிருந்துள்ளது. இதையடுத்து என்ன செய்வதென்று திகைத்தவர்கள்,
அந்த கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சாலையின் ஓரத்திலேயே சடலத்தை தீமூட்டியுள்ளனர்.கனமழை காலங்களில் இறுதிச் சடங்கில் கூட இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், சுடுகாட்டை மேடான பகுதியில் அமைத்து அவை செல்லும் வழியில் வடிகால் வசதி ஏற்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் அக்கிராம மக்கள்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago