எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்வர் ரங்கசாமிக்கும் மத்திய அரசு தொல்லை தருகிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினர்.
இதுபற்றி இன்று இரவு அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மத்தியகுழு புதுச்சேரியில் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. முதல்வர் ரங்கசாமி நிவாரணமாக ரூ. 300 கோடி கூறியுள்ளார்.
இதுவரை மத்திய அரசு மௌனமாகவே உள்ளது. அதிகாரிகள் 20 கோடி ரூபாய் மட்டுமே நிவாரணம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமைச் செயலர் அஸ்வினி குமாரை மாற்றக்கோரி மத்திய அரசிடம் பேசியுள்ளார். கடிதமும் அனுப்பி உள்ளார்.
ஆனால் இதுவரை தலைமைச் செயலரை மத்திய அரசு மாற்றவில்லை. எங்களுக்கு தொல்லை தந்தது போல் தற்போது முதல்வர் ரங்கசாமிக்கு மத்திய அரசு தொல்லை தருகிறது.
புதுச்சேரி மேல் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை.இதன் மூலம் மத்திய அரசு புதுச்சேரி ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இல்லை என்பது தெளிவாகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்துள்ளது பாஜக. இதன்மூலம் புதுச்சேரியை பாஜக வஞ்சித்தது உறுதியாகிறது.
ரங்கசாமி பாஜகவிடம் சரணாகதி அடைய கூடாது. மின் துறையை தனியார் மயமாக்க அனுமதிக்கக்கூடாது. சட்டப்பேரவையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago