தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பொதுப்பணித்துறை ஊழியரை தாக்கியதாக தளவாய்சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி அதிமுக எம்எல்ஏ. தளவாய் சுந்தரம். முன்னாள் அமைச்சரான இவர் தோவாளையை சேர்ந்தவர். இவர் மீது தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியரான நடேஷ்(33) என்பவர் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதில், கடந்த 16ம் தேதின்தோவாளை அரசு விருந்தினர் மாளிகையில் பணியில் இருந்தபோது, 7 பேர்களுடன் வந்த தளவாய் சுந்தரம் எம்எல்ஏ., முகநூலில் அவதூறு பரப்பியதாக கூறி தாக்கினர். இதைப்போல் தனது மனைவியும் தாக்கப்பட்டதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ. உட்பட 8 பேர் மீது 5 பிரிவுகளில் ஆரல்வாய்மொழி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் சம்பவம் குமரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 secs ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago