நாடு முழுவதும் இன்று மக்கள் நீதிமன்றம்: விபத்து இழப்பீடு காசோலைகளில் ‘அன்ட் கோ’என குறிப்பிடக்கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By கி.மகாராஜன்

நாடு முழுவதும் உள்ள நீதி மன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் வழங்கப்படும் இழப்பீடு பணத்தை பாதிக்கப்பட்டோர் முழுமையாகப் பெறுவதற்காக, அவர்களுக்கு வழங்கப்படும் காசோலைகளில் ‘அக்கவுண்ட் பேயி’ என்று மட்டுமே குறிப்பிட வேண்டும். ‘அன்ட் கோ’ என குறிப்பிடக்கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாலை விபத்துகளில் உயிரிழப் போரின் குடும்பத்தினர், காயமடை வோர் ஆகியோருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடுகின்றன. அதன்பேரில் பாதிக்கப்பட்டோர் பெயரில் இழப் பீட்டுத் தொகைக்கான காசோலை வழங்கப்படும். அதில், யார் பெய ருக்கு காசோலை வழங்கப்படுகி றதோ, அவரது வங்கிக் கணக்கில் மட்டும் காசோலையை வரவு வைப்பதற்காக, காசோலையின் இடதுபக்க மேல் மூலையில் ‘அக்கவுண்ட் பேயி’ என குறிப் பிடப்படும்.

இந்நிலையில், வாகன விபத்து வழக்குகளில் கீழமை நீதிமன் றங்களில் வழங்கப்படும் காசோலை களில் ‘அக்கவுண்ட் பேயி’ என்ப தற்குப் பதிலாக, ‘அன்ட் கோ’ என சில ஆண்டுகளாக குறிப்பிடப் படுகிறது. இதனால், அந்த காசோலையை பாதிக்கப்பட்டவர் கள் மட்டுமின்றி, வழக்கறிஞர்களும் தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும்.

இதனால் சில வழக்கறிஞர்கள் காசோலையை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தி பணத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தொகையை மட்டும் பாதிக்கப் பட்டோருக்கு வழங்குவதாக குற்றச் சாட்டு எழுந்தது. இந்நிலையில், இதற்கு முடிவுகட்டும் விதத்தில், இனிமேல் விபத்து வழக்குகளில் வழங்கப்படும் காசோலையில், ‘அன்ட் கோ’ என குறிப்பிடக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பி.டெக். மாணவர் என்.திலீப் என்கிற திலீப்குமார், 26.1.2007-ல் இ.சி.ஆர். சாலையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றபோது பேருந்து மோதி காயமடைந்தார். அவர், ரூ.3.66 லட்சம் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் அவருக்கு ரூ.1.26 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ரத்து செய்து, இழப் பீட்டுத் தொகையை அதிகரிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் திலீப் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் விபத்தில் கடுமையா கப் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது. அவருக்கு 2007-ல் இருந்து 9 சத வீத வட்டியும் வழங்க வேண்டும். இப்பணத்தை காப்பீட்டு நிறுவனம் நீதிமன்றக் கணக்கில் 8 வாரங் களுக்குள் செலுத்த வேண்டும்.

மாணவருக்கு நீதிமன்றம் காசோலை வழங்கும்போது அந்த காசோலையை மனுதாரர் கணக் கில் மட்டும் வரவு வைக்கும் வகை யில் காசோலையில் அக்கவுண்ட் பேயி என குறிப்பிட வேண்டும். வேறு நபர்கள் மற்றும் நிறுவனங் களின் பெயரில் காசோலை வழங் கக்கூடாது.

இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காசோலை வழங்கும்போது ‘அக்கவுண்ட் பேயி’ என்பதற்குப் பதிலாக, ‘அன்ட் கோ’ என குறிப்பிடு வதை அனைத்து நீதிமன்றங்களும் தவிர்க்க வேண்டும். காசோலை களில் ‘அக்கவுண்ட் பேயி’ என்று மட்டுமே குறிப்பிட வேண்டும்.

இதில் தவறு நடைபெறுவது இந்த நீதிமன்றத்தின் கவனத் துக்கு வந்தால், தவறு செய்த அதி காரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உத்தரவு தொடர்பாக மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் அனைத்து நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்ற பதிவுத் துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் இன்று மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. இதில் மோட்டார் வாகன விபத்துகளும் விசாரிக்கப்படுகின்றன. அப்போது பல வழக்குகளில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு காசோலை வழங்கப்படும். இந்த சூழலில் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்