பணகுடி அருகே கனமழையால் ஏற்பட்ட குளம் உடைப்பை சரிசெய்த விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே கனமழையால் மணிமலையன் புதுக்குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டது. அப்பகுதி பாசன விவசாயிகள் மண் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சரிசெய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களுக்குமுன் தொடர்ச்சியாக கனமழை பெய்து ஆறுகள், ஓடைகள் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து குளங்கள் நிரம்பி வருகின்றன. குளங்களுக்கு தண்ணீர் வரும் ஆதாரமான கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாத காரணத்தால் பல இடங்களில் தண்ணீர் வீணாகியது. குறிப்பாக ராதாபுரம், திசையன்விளை வட்டாரங்களில் ஏராளமான குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. பல மானாவாரி குளங்கள் பெருகவில்லை.

பணகுடி அருகேயுள்ள காவல்கிணறு பகுதியில் பெருமாள் புதுக்குளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கிய நிலையில், அக்குளத்திலிருந்து மணிமலையன் புதுக்குளத்துக்கு தண்ணீர் பாய்ந்தோடியது. இந்த குளம் பெருகிவந்த நிலையில் அதன்கரை யில் திடீரென்று உடைப்பெடுத்து தண்ணீர் வீணாகியது. இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் மணல் மூட்டைகளை அடுக்கி உடைப்பை சீர்செய்தனர்.

இந்த குளத்தில் பெருகி யுள்ள தண்ணீர் மூலம் சுற்று வட்டாரத்திலுள்ள 2,600 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று விவ சாயிகள் தெரிவிக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE