திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இதுகுறித்துத் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், நாளை மறுநாள் (21-11-2021) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வேளாண் சட்டங்கள் ரத்து, நீட் தேர்வு விவகாரம், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், கரோனா நிலவரம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
» தமிழக நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தலான சூழல்; விழிப்புணர்வு ஏற்படுத்துக: கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ
» தொடக்கத்திலேயே வாபஸ் பெற்றிருந்தால் பிரதமர் மோடிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்காது: விஜயகாந்த்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், திமுகவின் நிலைப்பாடுகள் குறித்து எம்.பி.க்களுடன் ஆலோசனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago