தமிழகம் முழுவதும் நடைபெற்ற 9-வது மெகா தடுப்பூசி முகாமில் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;
"முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் மெகா கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.
இம்மையங்களில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கோவிட் தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணையும் அளிக்க திட்டமிடப்பட்டது.
» மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடிவு செய்துள்ளோம்: பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பு
» நாடாளுமன்ற விவாதத்தில் அடிக்கடி பிரதமர் மோடி பங்கேற்பாரா? ப.சிதம்பரம் கேள்வி
இதுவரை நடைபெற்ற எட்டு மெகா கோவிட் தடுப்பூசி முகாம்கள் பற்றிய விவரம் பின்வருமாறு:
12-9-2021 ஆம் தேதி நடைபெற்ற முதலாம் மெகா தடுப்பூசி முகாமில் 28.91 லட்சம் பேரும், 9-09-2021 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் மெகா தடுப்பூசி முகாமில் 16.43 லட்சம் பேரும், 26-09-2021 அன்று நடைபெற்ற மூன்றாவது முகாமில் 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தினர்.
இதேபோல் 03-10-2021 அன்று நடைபெற்ற நான்காவது முகாமில் 17.04 லட்சம் பேரும், 10-10-2021ல் நடைபெற்ற ஐந்தாவது முகாமில் 22.85 லட்சம் பேரும், 23-10-2021ல் நடைபெற்ற ஆறாவது தடுப்பூசி முகாமில் 23.27 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தினர்.
30-10-2021அன்று நடைபெற்ற ஏழாவது முகாமில் 17.20 லட்சமும், 14-11-2021அன்று நடைபெற்ற எட்டாவது தடுப்பூசி முகாமில் 16.40 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இதனிடையே, வடகிழக்கு பருவமழை காரணமாக 23 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், நேற்று (18-11-2021) நடைபெற்ற ஒன்பதாவது மெகா கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 8,36,796 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 3,36,468 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 5,00,328 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை மாநகாராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடி கள ஆய்வு செய்தார்”.
இவ்வாறு தமிழக அரசு சாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago