அதிமுக வாக்குகளை குறிவைக்கும் பாஜக

By என்.சுவாமிநாதன்

கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்த லில் பாஜகவுக்கு வாக்களிக்கும் பலரும், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பதே வழக்கம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, களப்பணியை உடனடியாகத் தொடங்கிவிட்டது.

குறிப்பாக அதிமுக வாக்கு களை குறிவைத்து பிரச்சாரத் தைத் தொடங்கிவிட்டது. இது, அதிமு கவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. அப்போது பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணனே நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

வெற்றிபெற முனைப்பு

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குமரி மாவட்டத்தில் கிள்ளியூர் தொகுதி நீங்கலாக மீதமுள்ள 5 தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலை வகித்தது. அதிமுகவின் கோட்டையான கன்னியாகுமரி தொகுதியில் அக்கட்சியைவிட பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றது.

அதே வெற்றியை வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அறுவடை செய்ய பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதிமுக சார்பில் தற்போதுவரை வேட்பாளர் நேர்காணல் மட்டுமே நடை பெற்றுள்ளது. இன்னும் தேர்தல் பணிகள் தொடங்கப்படவில்லை.

பாஜக தீவிர பிரச்சாரம்

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்த பாஜக நினைக்கிறது. அதிக வாக்குகளைப் பெற வலுவான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், உடனடியாக பிரச்சாரப் பணிகளையும் அக்கட்சி தொடங்கிவிட்டது. அமைப்பு ரீதியாக கட்சி செயல்படும் இடங்க ளில் எல்லாம், உள்ளூர் கட்சியினர் தினம்தோறும் மக்களை சந்தித்து வருகின்றனர்.

இம்முறை குமரி மாவட்டத்தில் பாஜகவின் வழக்கமான வாக்கு வங்கியைவிட கூடுதலாக கிடைக்கும் வாக்குகள் அனைத்தும், அதிமுக வாக்குகளாகவே இருக்க வாய்ப்புள்ளது. எனினும், இது அதிமுகவின் வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம் உள்ளிட்ட செயல் பாடுகளைப் பொறுத்தே அமையும்.

அதிமுக வெற்றிபெறும்

இதுகுறித்து அதிமுக பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, “தேசிய கட்சியான பாஜக, மக்களவைத் தேர்தலில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி களத்தில் பணிபுரியும். கடந்த 5 ஆண்டுகளில் குமரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி உள்ளார். இலவச பொருட்கள் விநியோகம், தாலிக்குத் தங்கம் திட்டம் உள்ளிட்டவை மூலம் ஏராளமானோர் பயன டைந்துள்ளனர்.

அதேபோல், சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாவலனாக அதிமுக உள்ளது. அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்