முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை: அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு

By செய்திப்பிரிவு

மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து அங்கிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதையடுத்து மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (16.11.2021) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மேட்டூர், திப்பம்பட்டியில் நடைபெற்றுவரும் பிரதான நீரேற்று நிலையப் பணிகளை நேரில் பார்வையிட்டு, திப்பம்பட்டியிலிருந்து உபரி நீரை எம்.காளிப்பட்டிக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன் (சேலம்), செ.செந்தில்குமார் (தருமபுரி), சட்டப்பேரவை உறுப்பினர்கள் இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு), ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.சதாசிவம் (மேட்டூர்), இரா.அருள் (சேலம் மேற்கு), மாவட்ட வருவாய் அலுவலர் முனைவர் வெ.ஆலின்சுனேஜா, உதவி ஆட்சியர் (மேட்டூர்) வீர் பிரதாப் சிங், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரேவதி ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE