கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ்

By க.ரமேஷ்

கடலூர் மாவட்டம் புவனகிரி பரங்கிப்பேட்டை பகுதிகளில் வெள்ள சேத பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோர் இன்று புவனகிரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சித்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரிசி , பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர் .

பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய விளைநிலங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமி பார்வையிட்டனர்.

தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட பூவாலை கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வில். கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கே. ஏ. பாண்டியன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அருள்மொழிதேவன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அமைப்புச் செயலாளர் நாக முருகுமாறன், கடலூர் மாவட்ட ஊராட்சி. தலைவர் திருமாறன், முன்னாள் எம்எல்ஏ அருள் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் ராசாங்கம், அசோகன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் , உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்