நீர்மட்டம் 142 அடியை நெருங்கியுள்ள நிலையில் பெரியாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

By என்.கணேஷ்ராஜ்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கிவரும் நிலையில் நேற்று அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில் கடந்த மாதம் 29-ம் தேதி 138.50 அடியை நெருங்கிய நிலையில் கேரளாவுக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் நீதிமன்ற உத்தரவின்படி 142 அடி அளவுக்கு நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டது.

கடந்த ஒரு வாரமாக அணைக்கு நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 140 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து முதல் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. நேற்று நீர்வரத்து 3,378 கன அடியாகவும், நீர்மட்டம் 140.40 அடியாகவும் உயர்ந்தது. இதனால் இம்முறை நீர்மட்டம் 142 அடியாக உயரும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 1,867 கன அடியாக வெளியேற்றப்பட்ட நீரின் அளவு நேற்று 2,300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் வெளியேற்றத்தை குறைத்து நீதிமன்ற உத்தரவின்படி 142 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன் வர் பாலசிங்கம் கூறியதாவது: ஒவ் வொரு முறை பருவமழையின் போது முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த விடாமல், கேரளாவில் இருந்து தனி நபர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கின்றனர்.

எனவே 2014-ல் அளித்த தீர்ப்பே இறுதியானது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 142 அடிக்கு நீரை உயர்த்த வேண் டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்