பாலியல் தாக்குதல்களை முற்றிலுமாகத் தடுக்க, சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
"கோவை, உக்கடத்தைச் சேர்ந்த 17 வயது அரசுப் பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியரையும், தனது மரணத்திற்குக் காரணமான மற்ற இருவரையும் சும்மா விடக்கூடாது எனக் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் தற்கொலை செய்துகொண்ட அம்மாணவி கடந்த ஆண்டு பதினோராம் வகுப்பு பயின்றபோதே இணைய வழி வகுப்பில் ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுத்தால் தங்களது பள்ளியின் பெயர் கெட்டுப் போய்விடும் எனக் கருதிய பள்ளி நிர்வாகம், மாணவியை சமாதானம் பேசி அனுப்பியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
» குருகிராமின் பொது இடங்களில் முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை தொழுகையை எதிர்க்கும் இந்து அமைப்புகள்
» 'ராதே ஷ்யாம்' அப்டேட் வராததால் விரக்தி: தற்கொலைக் கடிதம் எழுதிய பிரபாஸ் ரசிகர்
பள்ளி நிர்வாகம் தங்களது சுயநலத்திற்காகத் தங்கள் பள்ளியில் நடந்த தவறை மறைத்து, தவறிழைத்த ஆசிரியரைக் காப்பாற்றியதால்தான் அந்த மாணவி அரசுப் பள்ளிக்கு மாறிய பிறகும் கூட, ஆசிரியரின் பாலியல் தொல்லை தொடர்ந்து, அம்மாணவியின் உயிரைப் பறிக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.
எனவே பாலியல் தொல்லை காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்குக் காரணமான ஆசிரியர் மீது மட்டுமின்றி நடந்த தவறை மறைத்து ஆசிரியரைக் காப்பாற்ற முயன்றுள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் காவல்துறையும், நீதித்துறையும், தமிழக அரசும் பத்தோடு ஒன்று இவ்வழக்கு என வழக்கம் போல் குறட்டை விட்டுத் தூங்காமல், பாதிக்கப்பட்ட மாணவியின் மரணத்திற்குத் தாமதமின்றி நீதி கிடைக்கவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்கவும், பெண் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை முற்றிலுமாகத் தடுக்க, சட்டங்களைக் கடுமையாக்க முன்வர வேண்டும்''.
இவ்வாறு பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago