சென்னையில் நவ.14-ம் தேதி இலவசக் கண்‌ பரிசோதனை முகாம்‌

By செய்திப்பிரிவு

கட்டுமானத்‌ தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு மற்றும்‌ குறு தொழிலாளர்களுக்கான இலவசக் கண்‌ பரிசோதனை முகாம்‌ நவம்பர்‌ 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக, முகாமை நடத்தும் சங்கர நேத்ராலயா ஆக்குபேஷனல்‌ ஆப்டோமெட்ரி சர்வீஸ்‌ மற்றும்‌ கம்ப்யூட்டர்‌ ஏஜ்‌ மேனேஜ்மென்ட்‌ சர்வீஸ்‌ இணைந்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:

''ஆட்டோ / கார்‌ ஓட்டுநர்கள்‌, ஆட்டோமொபைல்‌ மெக்கானிக்குகள், கட்டுமானத்‌ தொழிலாளர்கள்‌, வெல்டர்கள்‌, முடிதிருத்தும்‌ நிபுணர்கள்‌, நடைபாதை வியாபாரிகள்‌, செக்யூரிட்டி, மீனவர்கள்‌ ஆகிய சிறு மற்றும்‌ குறு தொழிலாளர்களுக்கான இலவசக் கண்‌ பரிசோதனை முகாம்‌, நவம்பர்‌ 14-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண்‌ மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

காலை 8 மணி முதல்‌ மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலந்துகொள்ளத் தகுதியுடையவர்கள் ஆதார்‌ அட்டை மற்றும்‌ வேலைக்கான ஆதாரத்தைக் கொண்டு வரவேண்டும்‌.

தொலைபேசி அழைப்பின்‌ மூலம்‌ 2021 நவம்பர்‌ 13 (சனிக்கிழமை) அன்று, அல்லது அதற்கு முன்பாக‌ (காலை 10 மணி முதல்‌ மாலை 4 மணிக்குள்‌) முன்பதிவு செய்யவேண்டும்‌. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள்‌ வருகையை உறுதி செய்ய வேண்டும்‌.

கூடுதல் தகவல்களுக்கு: 95000 62027 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்''.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்