கனமழை எதிரொலி: பூண்டிக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.

வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையைக் கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையைக் கடந்தது.

பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது. அப்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு முழுவதும் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசியது. தொடர் கனமழை காரணமாக ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

கனமழை காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பூண்டி ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆந்திரவின் அம்மன்பள்ளி அணையிலிருந்து 1,200 கன அடி நீர் திறந்து விடப்பட்டதன் காரணமாகவும், பூண்டி ஏரியைச் சுற்றியுள்ள ஏரிகளில் நீர் வெளியேற்றப்பட்டதன் காரணமாகவும், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

தற்போதையை நிலவரப்படி வினாடிக்கு 21,000 கன அடி நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றுக்கு உபரி நீரை வெளியேற்றுவது அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்