தருமபுரி மாவட்டம் முத்தம்பட்டி மலைப்பாதையில் பாறைகள் சரிந்ததால் கண்ணணூர் விரைவு ரயில் தடம் புரண்டது.
கேரள மாநிலம் கண்ணணூரிலிருந்து பெங்களூரு அடுத்த யஷ்வந்த்பூர் நோக்கி பயணிகள் விரைவு ரயில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
இன்று (12.11.21) அதிகாலை சேலம் ரயில் நிலையத்தை கடந்து பயணித்த ரயில் 3.50 மணியளவில் தருமபுரி மாவட்டம் வே.முத்தம்பட்டி பகுதி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தொடர் மழை காரணமாக ரயில் பாதையை ஒட்டிய மலைப்பகுதியில் இருந்து மண் சரிவு ஏற்பட்டது.
இதில் பாறைகளும் பெயர்ந்து ரயில் என்ஜினின் சக்கரத்தில் சிக்கியதால் ரயில் என்ஜின் லேசாக தடம் புரண்டது. மேலும் என்ஜினை ஒட்டியுள்ள 5 பெட்டிகளும் தடம் புரண்டன. அதே நேரம் ரயில் பயணிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
» கனமழை காரணமாக இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
» வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது
தகவல் அறிந்த ரயில்வே துறை பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தொடர் மழையிலும் ரயில் மீட்பு மற்றும் பாதை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது, ஒற்றை வழித்தட ரயில்பாதை என்பதால் அதிகாலை முதல் இவ்வழியே செல்லும் அனைத்து ரயில்களின் இயக்கமும் பாதிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடம் வனப்பகுதியின் நடுவே உள்ளதால் விபத்தில் சிக்கிய ரயிலின் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago