அரசு வேலை வாய்ப்பில் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தைச் சேர்ந்த சோழசூரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தின் பணிகளில் பெரும்பாலான இடங்களில் வடஇந்தியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக ரயில்வே பணிமனையில் 1,765 நபர்களுக்காக வழங்கப்பட்ட அப்ரண்டீஸ் பயிற்சியில் 1,600 பேர் வடஇந்தியாவைச் சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியானது.
இதுபோல பல்வேறு வேலைவாய்ப்புகளை வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெற்றுவருகின்றனர்.
» காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது; சென்னை ரெட் அலர்ட் வாபஸ்: வானிலை ஆய்வு மையம்
இதனால் தமிழகத்தில் உள்ள ஏராளமானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இது ஏற்கத்தக்கதல்ல. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த பகுதியை சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எனவே தமிழக மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் சட்டம் அல்லது அரசாணையை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பாசத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிச. 1-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago