வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது என்றும் இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மாலை, வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கியது. சென்னையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
» சென்னையில் 444 இடங்களை வெள்ள நீர் சூழ்ந்தது: 160 மரங்கள் வேரோடு சாய்ந்தன
» சிபிஐ ஒன்றியச் செயலாளர் படுகொலை; 5 பேர் கைது: : முன்விரோதம் காரணம் என திருவாரூர் எஸ்.பி. தகவல்
அடுத்து 2 மணி நேரத்திற்கும் அதே வேகத்தில் நகர்ந்து கரையைக் கடக்கும். இதனால் சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது. அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும் கூட கனமழை பெய்யலாம்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் தரைக் காற்று அதிகமாக வீசக்கூடும். 30 கி.மீ வேகத்திலிருந்து 40 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.
மழையைப் பொறுத்தவரையில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை முதல் மழை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago