தாம்பரத்தில் 23 செ.மீ. மழை: கொட்டித் தீர்க்கும் கனமழை

By செய்திப்பிரிவு

சென்னையில், தாம்பரம் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகப்படியாக 23 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை முழுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழைநீர் வடியால் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனிடையே, அதி கனமழை காரணமாக சென்னை பகுதியில் பதிவான மழைப்பொழிவு குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

"அதி கனமழை காரணமாக சென்னையில் தாம்பரம் பகுதியில் அதிகப்படியாக 23 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. மேலும் சோழவரத்தில் 22 செ.மீட்டரும், எண்ணூரில் 20 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோல் கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் பகுதிகளில் தலா 18 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீட்டரும், மீனம்பாக்கத்தில் 11 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது"

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்