சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 4 முக்கிய ஏரிகளில் இருந்தும் நீர் திரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புழல் ஏரி நீர்வரத்து 10,000 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு 2,000 லிருந்து, 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பூண்டி எரி நீர்வரத்து 8,000 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு 5,000 லிருந்து, 6,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் எரி நீர்வரத்து 5,240 கன அடியாக இருக்கிறது. நீர் திறப்பு விநாடிக்கு 2,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சோழவரம் ஏரி நீர்வரத்து 3625 கன அடியாக உள்ளது, நீர் திறப்பு 2151 கன அடியாக இருக்கிறது.
இன்று மாலை கரையைக் கடக்கிறது:
இதற்கிடையில், வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா இடையே சென்னைக்கு அருகில் கரையைக் கடந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையில் இருந்து தென் கிழக்கு திசையில் 170 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும்போது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடந்த பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago