கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், ஒருசில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்துடன் இன்று (11.11.2021) தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று வியாழக்கிழமை விடுமுறை அளிக்கபடுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago