கோவில் அறங்காவலர் பதவிக்கு விண்ணபிப்போரிடம்  சொத்து, வழக்கு விபரங்களை பெற தேவையில்லை : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

By கி.மகாராஜன்

தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கோவில்களில் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்போரிடம் சொத்து, வழக்கு விபரங்கள் குறித்த பிரமாணப் பத்திரம் பெற வேண்டியதில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த பாலாஜி கிருஷ்ணசாமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

"இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் பணிக்கு தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அறங்காவல் பணிக்கு விண்ணப்பிப்போரிடம் அவர்களின் சொத்து விபரங்கள் மற்றும் வழக்கு விபரங்கள் குறித்த பிரமாண பத்திரங்கள் பெறவும், அந்த பிரமாண பத்திரங்களை அனைவரும் பார்க்கும் வகையில் அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் உத்தரவிட வேண்டும்" .

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும்" என்றார்.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், "அறங்காவலர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதுபோன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்தால் அறங்காவலர் பணிக்கு விண்ணப்பிக்க யாரும் முன்வரமாட்டார்கள். இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க வேண்டியதில்லை" என்றார்.

இதையடுத்து, அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்? சொந்த வீடு உள்ளதா? என்பது போன்ற விபரங்களை ஏன் கேட்க வேண்டும். அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டது பிறகு அந்த விபரங்களை பெறலாம். தற்போது பிரமாண பத்திரம் கேட்க வேண்டியதில்லை. அறங்காவலர் பதவிக்கான விண்ணப்பத்தில் தேவையான விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன என்று கூறி, தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்