நவ.13-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம் 

By செய்திப்பிரிவு

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"தெற்கு அந்தமானை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நவ.13-ம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

புதிதாக உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நவ14, 15 ஆம் தேதிகளில், தீவிரமடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும்"

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே, தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வழுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்தது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி 11-ம் தேதி நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்