சேலம் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; நடவடிக்கை எடுக்காத எஸ்ஐ உட்பட 4 பேர் சஸ்பெண்ட்: வங்கதேச பெண் படுகொலை வழக்கு விசாரணையில் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்திய வங்கதேச பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததும், அது அறிந்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, நடவடிக்கை எடுக்கத் தவறிய எஸ்ஐ உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் தேஜ்மண்டல்(27). இவர் சேலம் சங்கர் நகரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தார். குமாரசாமிப்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த மாதம் தேஜ்மண்டல் வீடு பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதுதொடர்பாக அப்பகுதியினர் அஸ்தம்பட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பரணில் இருந்த சூட்கேஸில், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் அழுகிய நிலையில் சடலமாக இருந்தார்.

இதுதொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்து அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், தேஜ்மண்டல் தனதுமசாஜ் சென்டரில் பெண்களை வைத்துபாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், தேஜ்மண்டலின் ஆண்நண்பர் என சந்தேகிக்கப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்த லப்லு மற்றும் அவரது மசாஜ் சென்டரில் பணிபுரிந்த நிஷி என்பவரும் தலைமறைவாகினர்.

தொழில் போட்டி அல்லது அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடிக்க தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனபோலீஸார் சந்தேகித்தனர். தலைமறைவான லப்லு, நிஷி ஆகியோரை போலீஸார் தேடியபோது அவர்கள் வங்கதேசத்துக்கு தப்பிச் சென்றது தெரிந்தது.தொடர்ந்து அவர்களை கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதனிடையே, தேஜ்மண்டல் கொலை செய்யப்படுவதற்கு முன்னர்அவருடன் அஸ்தம்பட்டி எஸ்ஐ ஆனந்தகுமார், எஸ்எஸ்ஐ-க்கள் கலைச்செல்வன், சேகர் மற்றும் காவலர் மணிகண்டன் ஆகியோர் தொடர்பில் இருந்ததை இக்கொலை வழக்கை விசாரித்த மாநகர துணை ஆணையர் மாடசாமி தலைமையிலான போலீஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, எஸ்ஐ ஆனந்தகுமார் உள்ளிட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக காவல்துறை உயர்அதிகாரிகள் கூறியதாவது: தேஜ்மண்டல் மசாஜ் சென்டர் நடத்தியபோதுஅவருடன் எஸ்ஐ உள்ளிட்ட 4 பேரும்அடிக்கடி செல்போனில் பேசியதும்,மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்நடந்தது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காததும் தெரியவந்தது. மேலும், பாலியல் தொழில் வழக்கில் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்ட பிரதாப் என்பவருடனும் அவர்கள் 4பேருக்கும் தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே,எஸ்ஐ ஆனந்தகுமார் உள்ளிட்ட 4 பேரும்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்