தொடர் மழையால் விளைச்சல் பாதிப்பு: தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

தொடர்ந்து பெய்து வரும் மழையால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, ஓசூர், ராயக்கோட்டை சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ராயக்கோட்டை தளி, மத்திகிரி, பாகலூர்,சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளிசாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் தக்காளி, ராயக்கோட்டை,ஓசூர், கிருஷ்ணகிரி சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனையாகிறது.

குறிப்பாக, ராயக்கோட்டை தக்காளி மண்டியில் இருந்து நாள்தோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிரேடு தக்காளி ஏற்றுமதியாகிறது. ஒரு கிரேடு என்பது 30 கிலோ எடை கொண்டதாகும். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் தக்காளி விளைச்சல் அதிகரித்து விலை வீழ்ச்சியடைந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ.3-க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பரவலாக பெய்து வரும் மழையால் சீதோஷணநிலை மாறி தக்காளி விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நேற்று விவசாயிகளிடம் இருந்து தக்காளி கிரேடு தரத்தைப் பொறுத்து ரூ.1800 முதல் ரூ.2000-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-க்கும் மேல் விற்பனையாகிறது.

இதுதொடர்பாக ஓசூர், ராயக் கோட்டை தக்காளி வியாபாரிகள் கூறும்போது, மழையால் தக்காளி செடிகள் அழுகிவிட்டன. மேலும், மழையால் வெயிலின் தாக்கம் குறைவாக உள்ளதால் புதிதாக தக்காளி செடிகளை விவசாயிகள் நடவு செய்யவில்லை. இதன் காரணமாக பொங்கல் பண்டிகை வரை தக்காளி விலை உயர்ந்து காணப்படும்.

தற்போது உள்ள தக்காளி பழங்கள் அறுவடை 10 நாட்களில் முடிந்துவிடும். இதனால் தக்காளி கிலோ ரூ.100-ஐ கடக்கும். இன்று (9-ம் தேதி) நிலவரப்படி தரத்தை பொறுத்து கிரேடு ரூ.2000 வரை கொள்முதல் செய்யப்பட்டது. 800 கிரேடு தக்காளி மட்டுமே விற்பனைக்கு வந்தது. கூலி, போக்குவரத்து செலவு உள்ளிட்டவையால் சில்லரை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு மேல் விற்பனையாகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்