காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்காக ரூ.200 கோடி செலவில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆன நிலையிலும் மக்களை மறு குடியமர்த்தி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டில் பெய்த கனமழையில் காஞ்சிபுரம் நகரில் ஓடும் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறு பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்ததால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர்.
எனவே, இந்த ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வெள்ளத்தடுப்புச் சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொதுப்பணித் துறை அளவீடு செய்தபோது 1,406 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டது தெரிந்தது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டபோது எதிர்ப்பு கிளம்பியது.
இதைத் தொடர்ந்து ஆற்றை ஆக்கிரமித்து வீட்டை கட்டியுள்ளவர்களுக்கு மாற்றும் இடம் வழங்குவதற்காக கீழ்கதிர்பூர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.200 கோடியில் 2,112 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. இந்த வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே திறக்கப்பட்டன. இதில் 1,406 வீடுகள் வேகவதி ஆற்றில் வீடு கட்டி குடியிருப்போருக்காக ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 706 வீடுகள் விற்பனை செய்யப்பட்டன.
அகற்றப்படாத ஆக்கிரமிப்புகள்
மாற்று வீடுகள் கட்டப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அவர்களை அந்த குடியிருப்பில் குடியமர்த்தாமல் உள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அலுவலர் ஒருவர் கூறும்போது, ``புதிதாக கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மத்திய, மாநில அரசுகளின் பங்கு தொகை போக பயனாளிகள் ரூ.1.5 லட்சம் செலுத்த வேண்டும். நகரின் மையப் பகுதியை விட்டு, செல்ல விரும்பாத பலர் எங்களிடம் பணம் இல்லை என்று கூறி வருகின்றனர்.
எனவே பயனாளிகள், குடிசைமாற்று வாரியம், வங்கிகளை மாவட்ட நிர்வாகம் அழைத்து முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியது. பணம் செலுத்த முடியாதவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கடனை திரும்ப வசூல் செய்வது சிரமம் என்பதால் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. கடனை செலுத்தி முடிக்கும் வரை அந்த குடியிருப்புக்கான ஆவணங்கள் தங்களிடம் இருக்க வேண்டும் என்றும், கடனை செலுத்தாவிட்டால் அதன் மீது நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வங்கிகள் தரப்பில் கேட்கப்பட்டது.
இது தொடர்பாக குடிசை மாற்று வாரியம் தரப்பில் எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை. அவர்கள் பயனாளிகளிடம்தான் ஆவணங்களை கொடுக்க விதி உள்ளது. எங்கள் மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு தெரிவிக்கிறோம் என்றனர். இதற்கு பிறகு இந்த விவகாரம் அப்படியே உள்ளது என்றார்.
வேகவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ள நிலையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 2015-ம் ஆண்டைப் போல் தங்கள் பகுதிக்குள் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் ஆற்றுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் விரைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago