பார்சல் உணவில் பல்லி: கடையை 15 நாட்கள் மூட உத்தரவு

By செய்திப்பிரிவு

சங்கராபுரத்தில் உள்ள உணவ கத்தில் பார்சல் உணவு வாங்கிச்சென்றவர்கள் அதில் பல்லி இருப்பதை அறியாமல் உட் கொண்டு பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அங்குள்ள 3 கடைகளை 15 நாட்களுக்கு மூட உணவு பாதுகாப்பு துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரத்தில் உள்ள உணவகத்தில் கிடங்கன்பாண்டலத்தைச் சேர்ந்த சிவபாலன் என்பவர் கடந்த7-ம் தேதி பார்சல் உணவு வாங் கிச் சென்று வீட்டில் உணவு அருந்தியுள்ளார். உணவில் பல்லி விழுந்திருப்பதை அறிந்த நிலையில், வாந்தி மயக்கம் ஏற்பட்டுசங்கராபுரம் அரசு மருத்து வனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றார்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் சுகந்தன் தலைமையில் குழுவான கதிரவன், இளங்கோவன், பத்மநாதன், கொளஞ்சி உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று சங்கராபுரத்தில் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற் கொண்டனர். இதில் தரமற்ற காலா வதியான உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் காலாவதியான இறைச்சி இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.

ஆய்வு செய்யப்பட்ட 3 கடைகளில் தரமான உணவு சமைக்கவும்,இறைச்சி உணவுகளில் செயற் கையான வண்ணமூட்டிகளை பயன் படுத்தக் கூடாது என்றும் கடை உரிமையாளரை எச்சரித்தனர். மேலும் 15 நாட்களுக்கு உணவ கங்களை திறக்க கூடாது; முறையான பராமரிப்பு செய்து, பின்னர் அனுமதி பெற்ற பிறகே திறக்கப் பட வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

இந்த ஆய்வின் போது சங்க ராபுரம் வட்டாட்சியர் பாண்டியன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்