ரெட் அலர்ட் எதிரொலி டிஎன்பிஎஸ்சி வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதன் எதிரொலி டிஎன்பிஎஸ்சி வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் 3 நாட்களுக்கு கனழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகும் நிலையில் தமிழகத்தில் கனமழை பாதிப்புகளைத் தவிர்க்க, தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயத்தால் வெளியிடப்பட்ட துறைத் தேர்வுகள் மே 2021 அறிவிக்கை எண் 8/2021 நாள் 29.04.2021 தொடர்பான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித்தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் (Viva Voce) 10.11.2021 முதல் 17.11.2021 வரை ஏழு நாட்கள் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோயமுத்தூர், மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய 7 மையங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் அதிகனமழை மற்றும் வானிலை நிலைய ரெட் அலர்ட் காரணமாகவும் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் 10.11.2021 முதல் 13.11.2021 வரை ஆகிய நான்கு நாட்களில் மட்டும் நடைபெறவிருந்த 2 மற்றும் 3ஆம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இந்த 4 நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகளுக்கான தேதி தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்