புதுச்சேரியில் ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கடும் மழைப் பொழிவு ஏற்படும் என்ற ரெட் அலர்ட்டால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகள்) விடுமுறை விடப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பொதுத்தேர்வுகளும் நடைபெறாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.

1 முதல் 8-ம் வகுப்பு வரை கடந்த 8-ம் தேதி முதல் அரை நாள் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழையால் நவம்பர் 8, 9-ம் தேதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் கனமழை பொழியும் என ரெட் அலர்ட் புதுச்சேரிக்கு விடப்பட்டுள்ளது. அதனால் விடுமுறை புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் நாளையும், நாளை மறுநாளும் (10,11-ம் தேதிகளுக்கு) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்