முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; கேரள அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வருக: டிடிவி தினகரன்

By செய்திப்பிரிவு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது.

உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் இப்போது என்ன செய்யப் போகிறார்?

தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பகுதியில் இருந்து கேரள அரசு தன்னிச்சையாக தங்கள் மாநிலத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுக்கொண்டதை வேடிக்கை பார்த்தது போல இதையும் திமுக அரசு வேடிக்கை பார்க்க போகிறதா?

வெறுமனே கடிதம் எழுதுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களது கூட்டணி கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வரை தமிழக அமைச்சர்களை அனுப்பி நேரடியாக சந்திக்க வைத்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டுவர ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்