பேரிடர்க் காலங்களில் மாற்றுத்திறன் அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை: முதல்வரிடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

கனமழை மற்றும் பேரிடர்க் காலங்களில் அனைத்து அரசுத் துறையில் பணிபுரியும் மாற்றுத்திறன் பணியாளர்களுக்குச் சிறப்பு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கப் பொதுச் செயலாளர் டாக்டர் ஆவின் கி.கோபிநாத் எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:

"கனமழை காரணமாக, அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளைத் தவிர்த்து, சென்னையில் உள்ள மற்ற அரசு அலுவலகங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் அனைத்துத் துறை மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறைகளில் பணிபுரியும், மாற்றுத்திறன் அரசுப் பணியாளர்களின் நடைமுறைப் பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும் மழைக் காலங்களில் அவர்களால் வெளியே வர முடியாத சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பணிகள் துறை உட்பட தமிழக அரசின் அனைத்து அரசுத் துறைகளில் பணிபுரியும், மாற்றுத் திறன் அரசுப் பணியாளர்களுக்கு, இதுபோன்ற பெருமழை மற்றும் பேரிடர்க் காலங்களில் சிறப்பு விடுமுறை அல்லது பணிக்கு வருவதிலிருந்து முழு விலக்கு அளித்து உத்தரவிட தமிழக முதல்வரை, தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்".

இவ்வாறு மனுவில் ஆவின் கி.கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்