திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திண்டிவனத்தில் 2018 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் எம்.பி. கனிமொழி, குப்பையிலும் ஊழல் செய்துள்ளதாக அப்போதைய தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி மீதும், அதிமுக ஆட்சி குறித்தும் குற்றம் சாட்டியிருந்தார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை அதிமுக அரசு எடுக்கவில்லை என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் 2020ஆம் ஆண்டு விமர்சித்துப் பேசினார். இதேபோல் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்தார்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கடந்த ஜூன் 4ஆம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
» பருவமழையை எதிர்கொள்ளத் தயார் நிலையில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா: 10 முக்கிய நடவடிக்கைகள்
இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கனிமொழி, தயாநிதி மாறன், ஈவிகேஸ் இளங்கோவன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு நடைபெற்று வந்தது.
கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆகியோர், கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து தமிழக முதல்வர் அரசாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி கனிமொழி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். இதேபோல் மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
39 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago