புதுச்சேரி அரசுடன் ஒப்பந்தம் செய்து மூன்றாண்டுகள் கடந்தது; ‘அட்சய பாத்ரா’வில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு விநியோகிப்பது எப்போது?- கிடப்பில் போடப்பட்ட காலை உணவுத் திட்டம்

By செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு தர'அட்சய பாத்ரா'வுடன் கல்வித் துறை ஒப்பந்தம் செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் நிறைவடையவில்லை. அதே நேரத்தில் தமிழக முன்னாள் முதல்வர்கருணாநிதி பெயரில் தொடங்கப் பட்ட காலை உணவுத் திட்டமும் கிடப்பில் உள்ளது.

புதுச்சேரி பள்ளி கல்வி இயக் ககம், பெங்களூரைச் சேர்ந்த அட்சய பாத்ரா அறக்கட்டளையுடன் இணைந்து அரசுப் பள்ளி மாண வர்களுக்கு மதிய உணவு அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கடந்த 2018 ஜூலையில் கையெழுத்திட்டுள்ளது. இந்த அறக்கட்டளை யானது மதிய உணவை 12 மாநிலங்களில் செயல்படுத்துகிறது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் தொடக்கமாக புதுச்சேரி பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் உதவிபெறும் 300 பள்ளிகளைச் சேர்ந்த 50 ஆயிரம் மாணவர்களுக்கு உணவளிக்க திட்டமிட்டனர். இதற்காக லாஸ்பேட்டையில் அமைந்துள்ள மைய சமையற்கூடம் அட்சய பாத்ரா அமைப்பிடம் சிலஆண்டுகளுக்கு முன்பு ஒப்படைக்கப்பட்டது. ஒப்பந்தம் கையெழுத் தாகி மூன்றேகால் ஆண்டுகள் (40 மாதங்கள்) ஆகிவிட்டன. ஆனால்இப்பணிகள் இன்னும் நிறைவ டையவில்லை.

இதுதொடர்பாக கல்வித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, “லாஸ்பேட்டை மைய சமையல் கூடத்தை, அட்சய பாத்ரா அமைப்பினர் ரூ.13 கோடியில் நவீனப்படுத்தியுள்ளனர். முன்பிருந்த பழைய சாதனங்களை அகற்றி விட்டனர்.

புதிய சாதனங்களை பொருத்தி யுள்ளனர். அனைத்து சாதனங்க ளும் இயங்க மின்சாரம் அவசியம் தேவை. அதற்கு தனியாக டிரான்ஸ்பார்மரை மின்துறையினர் வைக்கவேண்டும். அப்பணிகள் பாக்கி யுள்ளது. தற்போது உணவு தயாரிக்கும் சாதனங்கள் தயாராக உள்ளன. மத்திய அரசு மதிய உணவுத் திட்டத்துக்கு அளிக்கும் மானியத்துடன் புதுச்சேரி அரசு அளிக்க வேண்டிய பங்கில் பாதியளவு மட்டுமே அட்சய பாத்ரா அறக்கட்டளைக்கு அளிக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சேமிப்பு கிடைக்கும். இவர்கள் சைவ உணவு மட்டுமே தயாரிப்பார்கள். அதனால் ரொட்டி, பால் ஊழியர்கள் மூலம் மாணவர்களுக்கு முட்டை தந்து விடுவோம்” என்று குறிப்பிட்டனர்.

காலை உணவுத் திட்டம் என்னானது?

காலை உணவுத் திட்டம் தொடர்பாக பள்ளிகள் தரப்பில் விசாரித்தபோது, “மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கடந்த 2020 நவம்பர் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. திமுக ஆதரவுடன் இருந்த காங்கிரஸ் அரசு அப்போது இத்திட்டத்தை தொடங்கியது. இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று அறிவித்து தொடங்கிய திட்டம் ஒரு நாள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. அதன் பிறகு பள்ளி திறக்கும்போது செயல்படும் என்றார்கள். தற்போது பள்ளி தொடங்கிய பிறகும் நடை முறைக்கு வரவில்லை” என்று குறிப்பிட்டனர்.

கடந்த செப்டம்பர் 1-ம் தேதி9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டாலும் காலைஉணவோ, மதிய உணவோ மாணவர்களுக்கு தரப்படவில்லை. அட்சய பாத்ரா திட்ட பணி முடியும்வரை மைய உணவு கூடத்தில் மதியஉணவு தயாரித்து, பள்ளி திறக்கப் படும் நாளிலிருந்து தர முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில் கருணாநிதி பெயரால் அறிவிக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சியான திமுக எவ்வித கேள்வியும் எழுப்பாமல் உள்ளது. அரசும் அதை கண்டுகொள்ளாமல் மவுனம் காக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்