இந்தியாவில் மீனவர்களுக்கான பிரத்யேக முதல் சமுதாய வானொலி விரைவில் பாம்பனில் தனது ஒலிபரப்பை துவங்க உள்ளது.
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்பது மீனவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது என பல்வேறு சேவைகளை ராமேசுவரம் பகுதிகளில் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மீனவர்கள் நேசக்கரங்கள் அறக்கட்டளை செய்து வருகின்றனது.
இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்தோர் பயனடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பில் இந்தியாவிலேயே முதன்முறையாக மீனவர்களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையம் கடல் ஓசை என்ற பெயரில் பாம்பனில் அமைக்கப்பட்டு உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு ராமேசுவரத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கடல் ஓசை சமுதாய வானொலி குறித்து மீனவர் நேசக்கரங்கள் அறக்கட்டளையின் அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ மற்றும் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ராமேசுவரம் தீவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியை சார்ந்த இளைஞர்களையே வானொலி வல்லுநர்களாக பயிற்சி அளித்து கடல் ஓசை சமுதாய வானொலி 90.4 என்ற அலைவரிசையில் இயங்க உள்ளது. கடல் ஓசை இந்தியாவிலேயே முதன் முறையாக மீனவர்களுக்கென்று பிரத்யேகமாக ஒலிபரப்பாக உள்ள சமுதாய வானொலி ஆகும்.
விசைப்படகுகளில் மீன்பிடிப்புக்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்து காலங்களில் மீனவர்கள் செய்ய வேண்டியது என்ன? கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்த குறித்த தகவல்களை கடல் ஓசை சமுதாய வானொலி ஒலிபரப்பப்படும்.
மீனவர்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்கள், மீனவ குழந்தைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு, மீனவ பெண்களுக்கான பிரத்தியேகமான வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி அளிப்பது, சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது மற்றும் ஏற்றுமதி குறித்த தொழில்நுட்ப உரைகளும் கடல் ஓசையில் இடம் பெறும்.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் உயிர் வாழக்கூடிய அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கடல் சூழலியல் மண்டலத்தை பாதிக்காத வண்ணம் மீன்பிடி முறைகளை குறித்த நிகழ்ச்சிகளையும் கடல் ஓசை வனொலியில் கேட்கலாம். மேலும் கடல் ஓசை இணையதளத்தில் நேரலைகளாக உலகெங்கும் கேட்பதற்கு வழிவகை செய்யப்படும், என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago