மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என தேமுகவினரை விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் ஞாயிறு காலை 5 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ந்தது. சென்னையில் அதிகப்பட்சமாக நுங்கம்பாக்கத்தில் 20 செ.மீ கனமழைபதிவாகி உள்ளது.
எம்ஆர்சி நகர், அண்ணா பல்கலைகழகம், வில்லிவாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், தரமணி, நந்தனம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ந்தது.
சென்னை பல இடங்களில் 10 செ.மீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இதனால் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது கட்சியினரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தேமுதிகவினர் தங்களால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago