தொடர் கனமழை காரணமாக காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 23,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாகவே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு 5,000 முதல் 6,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் தொடர் கனமழை பெய்து வருவதால் நேற்று தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
தீவிர மழைப்பொழிவு காரணமாகத் தமிழகத்திற்கு இன்று கூடுதலாக 13,000 கன அடி நீர் திறக்கப்பட்டு, 23,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை எட்டியுள்ளது.
» ஆப்கனில் பெண்களுக்கு தொடரும் தடை: தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற தலிபான்கள் அனுமதி மறுப்பு
» அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி: அவசர கால அனுமதி கோரி விண்ணப்பம்
சாதாரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடி எட்டினால் ஒகேனக்கல் அருவிகளில் அதிக அளவிலான நீர் தேங்கி நிற்கும். தற்போது மேட்டூர் அணை 114 அடியை எட்டியுள்ளதால் அதிகப்படியான நீர் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago