தீபாவளி; சென்னையில் 138.21 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்

By செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 138.21 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாகச் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம்- 1 முதல் 15 வரை நாள்தோறும் சராசரியாக சுமார் 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகின்றன. நாள்தோறும் சேகரமாகின்ற குப்பையை அகற்றுவதற்காக 358 கனரக / இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் மற்றும் 3,725 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் அன்றாடம் தூய்மைப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் 03.11.2021 அன்று 5076.53 மெட்ரிக் டன் குப்பை, 559.32 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 416 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 145 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 04.11.2021 அன்று 4312.40 மெட்ரிக் டன் குப்பை, 499.70 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 454.64 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 45.06 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகள் நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகள் கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பட்டாசுக் கழிவுகள்

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாகச் சேகரமாகும் பட்டாசுக் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாகச் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 05.11.2021 நண்பகல் 12 மணி வரை 138.21 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாகச் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தபட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்பட்டுள்ள பட்டாசுக் குப்பைகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகள் சேகரிப்பு மற்றும் அகற்றும் “தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மன்ட் லிமிடெட்” நிலையத்திற்கு 33 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் மூலம் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இன்றும் (05.11.2021) பட்டாசுக் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக தனியாகச் சேகரிக்கப்பட்டுப் பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத் தூய்மைப் பணி

சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பேணிக் காக்கவும் திடக்கழிவுகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களால் நாள்தோறும் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றித் திடக் கழிவுகளை அகற்ற இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இரவு நேரங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ள 304 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள், 104 மூன்று சக்கர வாகனங்கள், 163 காம்பாக்டர் வாகனங்கள், 53 மெக்கானிக்கல் ஸ்வீப்பர், 21 டிப்பர் லாரிகள் மற்றும் 2,192 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்''.

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்