விருப்ப மனு அளிக்காதபோதும் தனது ஆதரவாளர்களுக்காக 8 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என கூறி, அதற்கான பட்டியலை தங்கபாலுவிடம் ப.சிதம்பரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் தரப்பில் விருப்ப மனு பெற்றபோதும், நேர்காணல் நடந்தபோதும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் ஒதுங்கியே இருந்தனர். இதையடுத்து தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வுக்காக தனது தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தினார் ப.சிதம்பரம். அதற்கு பலன் கிடைக்கவில்லை. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுக்காக இளங்கோவன் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை தலைமை அறிவித்திருக்கிறது. இதில் 3 பேர் இளங்கோவனின் ஆதரவாளர்கள் என்பதால் குழுவிலும் இளங்கோவன் கையே ஓங்கி இருக்கிறது.
இந்நிலையில் குழுவில், தனது ஆதரவாளர் களுக்காக 8 தொகுதிகளை பட்டியலிட்டு, அதை குழுவில் உள்ள தங்கபாலுவிடம் சிதம்பரம் கொடுத்திருப்பதாக சொல்லப்படு கிறது. இதுகுறித்து சிதம்பரம் தரப்பினர் கூறும் போது, ‘‘குழுவில் இடம் பெறாவிட்டாலும் தனது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை பெற்றுத் தருவதில் சிதம்பரம் உறுதியாக இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் புஷ்பராஜிக்காக திருமயம் அல்லது ஆலங்குடி, திருச்சி முன்னாள் மேயர் சுஜாதாவுக்காக திருச்சி மேற்கு அல்லது ரங்கம், கே.எஸ்.அழகிரிக்காக சிதம்பரம், வள்ளல் பெருமானுக்காக காட்டுமன்னார் கோவில், எம்.என்.கந்தசாமிக்காக தொண்டா முத்தூர், கராத்தே தியாகராஜனுக்காக மயிலாப்பூர் என மொத்தம் 8 தொகுதிகளை தனது ஆதரவாளர்களுக்காக கேட்டு தங்கபாலு விடம் பட்டியல் கொடுத்துவிட்டார். இறுதி முடிவு எடுப்பது டெல்லிதானே. அதனால், தொகுதிகளை அவர் எப்படி வாங்குகிறார் என்று பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றனர்.
சிதம்பரத்தால் தொகுதிகளை பெற முடியுமா என டெல்லியில் உள்ள காங்கிரஸ் முக்கிய பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
மாநில தேர்தல் குழு, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை தயாரித்து கட்சியின் ஸ்கிரீனிங் கமிட்டிக்கு பரிந்துரைக்கும். இந்தக் கமிட்டியில் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக் ஆகியோர் இடம்பெறுவர். காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவரும் மாநிலத் தலைவரும் மட்டுமே இந்த கமிட்டியில் அமர்ந்து பேச அதிகாரம் கொண்டவர்கள். பின்னர், கட்சியின் முக்கியப் பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் வேட்பாளர் தேர்வு குறித்து கருத்து கேட்கப் படும். அப்போது, ப.சிதம்பரம் தனது செல் வாக்கை பயன்படுத்தி பட்டியலில் ஆதரவாளர் களை சேர்த்துவிடுவார். ஸ்கிரீனிங் கமிட்டி தரும் பட்டியலை சோனியா காந்தி தலைமையிலான 11 பேர் கொண்ட தேர்தல் கமிட்டிக்கு பரி சீலித்து இறுதி செய்யும். டெல்லியில் இவ்வளவு நடைமுறைகள் இருப்பதால் தேசிய தலை வரான சிதம்பரத்துக்கு எதுவும் சாத்தியமே.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ப.சிதம்பரம் வீட்டில் ஆலோசனை
இந்நிலையில், காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், வசந்தகுமார், கோபிநாத் ஆகியோர் நேற்று ப.சிதம்பரத்தை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். தங்களது ஆதரவாளர்களுக்கு அதிக தொகுதிகளைப் பெறுவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தனது ஆதரவாளர்களுடன் ப.சிதம்பரம் தனியாக ஆலோசனை நடத்தினார். இதில் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், கே.எஸ்.அழகிரி, டாக்டர் வள்ளல்பெருமான், சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago