பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: ஓபிஎஸ் வரவேற்பு; மக்களின் வாங்கும் சக்தி உயரும் எனக் கருத்து

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைப்புக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர் ஏற்றம் கண்டதால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளான நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று குறைத்தது.

அதன்படி பெட்ரோல் மீதான கலால் வரி ரூ.5ம் டீசல் மீதான கலால் வரி ரூ.10ம் குறைக்கப்பட்டது. இது இன்று (நவம்பர் 4 ஆம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ராபி பருவ சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வரும் நிலையில் டீசல் மீதான கலால் வரி பெட்ரோல் மீதான கலால் வரியைக் காட்டிலும் இருமடங்கு குறைக்கப்பட்டுள்ளது மிகுந்த வரவேற்பைப் பெறும் என்று மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான் வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி குறைப்புக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மத்திய அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்