மதுரையில் மாசி வீதிகள், விளக்குத்தூண் பகுதியில் தீபாவளி பொருட்கள் வாங்க அலைகடலென திரண்ட மக்கள்: கூவிக்கூவி விற்பனை செய்த வியாபாரிகள்

By என்.சன்னாசி

தீபாவளியை முன்னிட்டு மதுரையில் நேற்று புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் குவிந்ததால் விளக்குத்தூண், கீழவாசல் பகுதியில் கூட்டம் அலைமோதியது. கடைசி நேரத்தில் பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏராளமான சலுகை களை வியாபாரிகள் வழங்கினர்.

கரோனா நோய் தொற்று கார ணமாக கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் விறுவிறுப்பு இன்றி, மதுரையில் விளக்குத்தூண் உள்ளிட்ட முக்கிய பஜார்கள் களையிழந்து காணப்பட்டன. தற் போது நோய் தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மதுரையில் தீபாவளி பொருட்கள் விற்பனை களைகட்டியது. விளக்குத்தூண், கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி உள்ளிட்ட பகுதி களில் புத்தாடை, பட்டாசுகள், இனிப்பு மற்றும் பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்கு ஏராள மான மக்கள் திரண்டனர்.

இப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் பலர் தள்ளுபடி விலையில் துணிகள், வீட்டு உப யோகப் பொருட்களை விற்பனை செய்தனர். இன்று தீபாவளி என்பதால் நேற்று நள்ளிரவு வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. இறுதிக்கட்ட விற்பனையில் வியா பாரிகள் மும்முரமாக ஈடுபட்டனர்.

ஆடைகள், குடம், பாய் முதல் குடை வரை பல்வேறு பொருட்களையும் கூவிக்கூவி சலுகை விலையில் விற்பனை செய்தனர். நகர் முழுவதும் இனிப்பு, பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. கூட்டம் நிரம்பி வழிந்தது. நள்ளிரவு வரை தீபாவளி பஜார் நீடித்தது. இறுதிக்கட்ட தீபாவளி பொருட்கள் விற்பனையை முன்னிட்டு கீழ வாசல், விளக்குத்தூண், மாசி வீதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட் டிருந்தது. இச்சாலைகளில் மக்கள் நடந்து செல்ல மட்டும் அனுமதிக் கப்பட்டனர்.

நகர் முழுவதும் சாலை சிக்னல்களில் நெரிசல் அதிகமாக இருந்தது. சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இருந்தது. நெரிசலை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டுகளைத் தடுக்க போலீஸார் தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். விளக்குத்தூண், மாசி வீதி சந்திப்புகளில் தற்காலிக கண் காணிப்பு கோபுரம் அமைத்து போலீஸார் கண்காணித்தனர். விளக்குத்தூண், கீழவாசல், மாசி வீதிகளில் ஏற்கெனவே இருக்கும் சிசிடிவி கேமராக்கள் தவிர, கூடுதலாக 200-க்கும் மேற்பட்ட கேமராக்களைப் பொருத்தி கூட்டத்தைக் கண்காணித்தனர். மகளிர் போலீஸார் சாதாரண உடையில் கூட்டத்துக்கு நடுவே கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்