வருமான வரி அதிகாரிகள் போல நடித்து கொள்ளையடித்த 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

பனையூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளையடித்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சென்னை பனையூர் விஜிபி தெற்கு அவென்யூவில் வசிப்பவர் ஆறுமுகம். இவரது வீட்டுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி ஒரு காரில் 8 பேர் வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறினர். பிறகு சோதனை நடத்துவதாக கூறி ரூ.1.30 லட்சம் பணம் மற்றும் 75 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கானாத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். குற்றவாளி களை பிடிக்க உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்கள் பாலன், ஜெயகிருஷ்ணன் ஆகி யோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது. அதி காரிகள் போல கொள்ளை யடிப்பவர்களின் பட்டியலை எடுத்து நடத்தப்பட்ட விசா ரணையில் பல தகவல்கள் காவல் துறையினருக்கு கிடைத்தது.

தண்டையார்பேட்டை இந்திரா காந்தி நகரை சேர்ந்த குமார்(52) என்பவர், ஏழுகிணறு பகுதியில் ஒருவரிடம் சிபிஐ அதிகாரி போல நடித்து பல லட்சம் பணம் கொள்ளையடித்து, காவல் துறையினரிடம் சிக்கி, சிறை சென்று தற்போது விடுதலையாகி இருப்பது தெரிந்தது. அவரது புகைப்படத்தை ஆறுமுகத்திடம் காவல் துறையினர் காட்டினர். தன்னிடம் மோசடி செய்த எட்டு பேரில் இவரும் ஒருவர் என்று ஆறுமுகம் அடையாளம் காட்டினார். அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குமார், அவரது கூட்டாளிகளான மண்ணடியை சேர்ந்த அப்துல்ஹக்(40), மணலியை சேர்ந்த பிரேம்குமார்(33), தண்டையார்பேட்டையை சேர்ந்த கந்தவேல்(22) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருக்கும் மேலும் நான்கு பேரை பிடிக்க தனிப்படையினர் தீவிர நட வடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்