பள்ளிகளுக்கு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் வரும் நவம்பர் 5,6-ம் தேதிகள் விடுமுறையை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. வரும் 8-ம் தேதி முதல் பள்ளிகள் முழுமையாக இயங்க உள்ளன.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4-ம் தேதி வருகிறது. இந்துக்களின் பண்டிகைகளில் தீபாவளி வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக தீபாவளிக்கு ஷாப்பிங், சொந்த ஊர் செல்வது என அனைவரும் கொண்டாடுவார்கள்.
இம்முறை பள்ளிகளுக்கு கடந்த நவம்பர் 1 புதுச்சேரி விடுதலை நாள் என்பதால் அரசு விடுமுறை விடப்பட்டது.
2-ம் தேதி கல்லறை தினம் அன்றும், 3-ம் தேதி தீபாவளியொட்டியும் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
» தனியார் உரக்கடைகள் பிற உரங்களை வாங்கக் கட்டாயப்படுத்தக் கூடாது: வேளாண்துறை எச்சரிக்கை
» வெடி, மத்தாப்பு வடிவங்களில் சாக்லேட்: தொழில்முனைவோர் ஆன ஐ.டி. ஊழியர் அசத்தல்
அதே நேரத்தில் பல தனியார் பள்ளிகள் தீபாவளியொட்டி இந்தவாரம் முழுக்க பள்ளிகள் முழு விடுமுறை என அறிவித்துள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வரும் 5,6-ம் தேதிகளில் அரசு விடுமுறையை கல்வி துறை முறைப்படி இன்று அறிவித்துள்ளது. வரும் 8-ம் தேதி முதல் கல்வித்துறை உத்தரவுப்படி பள்ளிகள் அரை நாள் செயல்படத்தொடங்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago