தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 3 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி 3 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களின் விவரம் வருமாறு:

1. ரயில் எண் 06037 / 06038 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் – சென்னை எழும்பூர்
அதிவிரைவி, சிறப்புக் கட்டண சிறப்பு ரயில். ரயில் எண் 06037, நவம்பர் 3 ஆம் தேதி இரவு 10.05 மணிக்கு சென்னை எழும்பூரில் புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவிலை அடையும். ரயில் எண் 06038ம் நவம்பர் 5 ஆம் தேதி பிறபகல் 3.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு நவம்பர் 6 ஆம் தேதி காலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

2. ரயில் எண்: 06040 திருநெல்வேலி – தாம்பரம் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (தென்காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாச்சலம் வாயிலாக தாம்பரம் சென்றடையும்). இந்த ரயில் நவம்பர் 7 மாலை 7 மணியளவில் திருநெல்வேலியில் புறப்பட்டு மறுநாள் நவம்பர் 8 காலை 7.55 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

3. ரயில் எண் 06049: தாம்பரம் திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில். ( விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மதுரை, கோவில்பட்டி வாயிலாக நெல்லை சென்றடையும்) நவம்பர் 8 ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு நவம்பர் 9 அதிகாலை 3 மணியளவில் நெல்லை சென்றடையும்.

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 2) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்