அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் மற்றும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
அமெரிக்காவில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் சார்பில் தீபாவளி கொண்டாட்டம் அண்மையில் நியூ ஜெர்சியில் நடைபெற்றது.
சங்க நிறுவனர் டாக்டர் பழனிசாமி சுந்தரம் வள்ளுவர் சிலையைத் திறந்துவைத்து, நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தையே அங்குள்ள தமிழ்க் குழந்தைகள் இசையுடன் பாடினர். மூத்த அறிஞர் முருகானந்தம் `அன்றாட வாழ்வில் திருக்குறள்' என்ற தலைப்பில் பேசினார்.ப்ளைன்ஸ்போரோ தமிழ் கிளப்பின்உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட சில திருக்குறள்களை வாசித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஒரு துளிக் கவிதை, அட்லாண்டா தமிழ் நூலகம், வல்லின சிறகுகள், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் ஆகியவை இணைந்து, தமிழ்ப் புத்தகக் கண்காட்சியை நடத்தின.
நியூ ஜெர்சி நகரில் நடைபெற்ற முதல் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி என்பதால், அது விழாவில் பங்கேற்றோரை பெரிதும்கவர்ந்தது. இந்தக் கண்காட்சியை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வாசு ரெங்கநாதன் திறந்துவைத்தார். அவர் பேசும்போது, "இத்தகைய புத்தகக் கண்காட்சிகள், ஒருமொழியின் பாதுகாப்பு மற்றும்வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை" என்றார்.
இதில், ஜெயகாந்தன், கவிஞர் வைரமுத்து, பிரபஞ்சன், ஈரோடு தமிழன்பன், தமிழ்ச் செம்மல் சோம வீரப்பன் போன்ற பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்கள் உட்பட சுமார் 450 புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருத்தன. கல்கி, பிரபஞ்சனின் சிறுகதைகள், சோம வீரப்பனின் `குறள் இனிது' உள்ளிட்ட நூல்கள் உடனே விற்றுத் தீர்ந்தன.
மேலும், இந்த நிகழ்ச்சியில் இசை, நடனம், தீபாவளி ஷாப்பிங் மற்றும் உணவு அரங்கங்களும் இடம்பெற்றன. சங்கத் தலைவர் பாலமுரளி கோதண்டராமன், துணைத் தலைவர் கீதாஞ்சலி பொன்முடி, பொருளாளர் சுசித்ரா னிவாஸ், துணைப் பொருளாளர் அனுராதா சேஷாத்ரி, தகவல் தொடர்பு இயக்குநர் கவிதா சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
15 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago