அணையில் கேரள அதிகாரிகள் முகாம்; அமைச்சர் துரைமுருகன் உண்மையை மூடி மறைக்கிறார்: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணையைத் திறந்த விவகாரத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் உண்மையை மூடி மறைப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட் டினார்.

மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் 142 அடியாக தண்ணீரைத் தேக்கலாம் என்ற தீர்ப்பை, உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா பெற்று தந்தார். தற்போது மழையால் அணையின் நீர்மட்டம் 138.85 அடியாக உயர்ந்துள்ளது. ஆனால், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அணையைப் பார்வையிட்டு 142 அடி நிரம்பும் முன்பே கேரள பகுதிக்கு தண்ணீரைத் திறந்து விட்டுள்ளார்.

ஆனாலும், தமிழக நீர்ப் பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று, பெரியாறு அணையைத் திறந்து விட்டது தமிழகம்தான் எனக் கூறி வரு கிறார். முல்லை பெரியாறு அணை பகுதியில் கேரள அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள் ளனர். கேரள அரசு தன்னிச் சையாக தண்ணீரைத் திறந்ததால் தமிழ கத்தில் 5 மாவட்ட விவசாயிகளின் உரிமை கேள்விக் குறியாகி உள்ளது. பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, கடமை தமிழக அரசுக்கு உள்ளது. உண்மை நிலையை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வமும் வலியுறுத்தி உள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுக கூட்டணியில் இருப்பதால் வாய் திறக்க அஞ்சுகின்றனர். மேலும், ரூ. 1,500 கோடியில் கேரள அரசு புதிய அணையைக் கட்ட முயற்சிக்கிறது. தமிழக அரசு 142 அடி நீரைத் தேக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்